Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்…பறக்கும் படை அதிரடி..!!

மதுரை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல்  எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தெப்பகுளம் அருகில்  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி கனரா வங்கியிலிருந்து மதுரைக்கு பணம் எடுத்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 5 கோடி ரூபாய் பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்த பணத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

 

Categories

Tech |