Categories
மாநில செய்திகள்

சென்னையில் வெடிக்கும் போராட்டம்… போலீசார் தடியடி… பெரும் பரபரப்பு…!!!

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் CPIM கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தை கலைப்பதற்கு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி CPIM கட்சியினர் சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். அதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Categories

Tech |