மட்டன் சுக்கா செய்ய தேவையான பொருள்கள்:
எலும்பு நீக்கிய மட்டன் – கால் கிலோ
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டுபேஸ்ட் – 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 15
தேங்காய் துருவியது – 3 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
கடுகு – 1 ஸ்பூன்
எண்ணெய் – ஸ்பூன்
மிளகு தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காயை எடுத்து நன்கு துருவி கொள்ளவும். பின்பு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி பருப்பை போட்டு, தண்ணீர் சேர்க்காமல் நன்கு கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்சிஜாரில் நறுக்கிய இஞ்சி, பூண்டை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு பாத்திரத்தில் மட்டனை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். மேலும் அடுப்பில் குக்கரை நறுக்கிய மட்டன் துண்டுகள், சிறிதளவு உப்பு , மஞ்சள்தூள், அரைத்த இஞ்சி, பூண்டுபேஸ்ட் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டுபேஸ்ட் போட்டு, மஞ்சள்தூள் ,மிளகாய் தூள் சேர்த்து சிறிது கிளறி, நன்கு வேக வைக்கவும்.
பின்பு அதனுடன் வேக வைத்த மட்டன் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து சிறிது நிமிடம் கிளறி, அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, மிளகு தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் நன்கு வற்றியதும் கிளரி இறக்கி பரிமாறினால் சுவையான மட்டன் சுக்கா ரெடி.