நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்திற்கும் பசுமை வரி உயர்த்தப்பட்டு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மேலும் சில மாவட்டங்களின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வெளிமாவட்ட வாகனங்களுக்கும் இன்று முதல் பசுமை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி கனரக வாகனங்களுக்கு 100 ரூபாய், மேக்ஸி கேப் வாகனங்களுக்கு 70 ரூபாய், கார் மற்றும் ஜீப்களுக்கு 30 ரூபாய், மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், டூவீலர்களுக்கு பத்து ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த செய்தி வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.