Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி… செல்ல மறுத்த பாலிவுட் நடிகை… படப்பிடிப்புக்கு தடை விதித்ததால் பரபரப்பு…!!!

நடிகை வித்யா பாலன் மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வித்யாபாலன் தற்போது ‘ஷெர்னி’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யாபாலன் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில வனத்துறை மந்திரி விஜய் ஷா இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் விருந்துக்கு செல்ல வித்யாபாலன் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற படக்குழுவினரை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். வனப்பகுதிக்குள் இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதித்தால் படக்குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இந்த  படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்ட காரணம் அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல நடிகை வித்யா பாலன் மறுத்தது தான் என கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் விஜய் ஷா இதனை மறுத்துள்ளார்.மேலும் அவர் ‘படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க படக்குழு என்னை அணுகி இரவு விருந்துக்கு அழைத்தனர் . மகாராஷ்டிரா வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என கூறினேன் தவிர நான் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை’ என்று தெரிவித்தார்.

Categories

Tech |