Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

புதிதாக உருவாகியுள்ள புரேவி புயல் காரணமாக மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த புதிய புயல் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இதன் காரணமாக மக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |