Categories
மாநில செய்திகள்

மின் கம்பம் அருகே செல்ல வேண்டாம்… பொது மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அது நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. அதன்பிறகு தமிழகத்தை நோக்கி புயல் நகரம் என்பதால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் மாவட்ட மக்கள் மழை பெய்யும் சமயத்தில் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் செல்லவோ அதனை தொட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நீர் படாத வகையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |