Categories
தேசிய செய்திகள்

திருட்டுத்தனமாக செம்மரம் கடத்த முயன்ற வாலிபர்கள்… மின்சாரம் தாக்கியதால் நேர்ந்த சோகம்..!!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்திய ஆசிரியர் பயிற்சி வாலிபர் உள்ளிட்ட 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் பிஎஸ்சி, பி.எட் படித்துள்ளார். கடந்த 23ஆம் தேதி இவரும், சகோதரர் ஜெயச்சந்திரா என்பவரும் வேலூருக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த திருப்பதிக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபனும்  சென்றுள்ளார்.

3 பேரும் நேற்று முன்தினம் செம்மர கடத்தல் கும்பலுடன் சேர்ந்து திருப்பதியை அடுத்த எராவாரிப்பாளையம் மண்டலம் போடேவான்டலப்பள்ளி, பல்லம்வாரிப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு அருகில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி தோளில் தூக்கி வந்தனர். விவசாய நிலத்தில் வந்த போது வழியில் இருந்த ஒரு மின் கம்பத்தில் இருந்து மின்கம்பிகள் அறுந்து கீழே கிடந்துள்ளது. அதனை கவனிக்காமல் வந்த போது ராஜா, விஜயகுமார் ஆகியோர் மின்கம்பியை மிதித்துள்ளனர்.

அதனால் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து இரண்டு பேரின் பெற்றோரும், உறவினர்களும் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவர்களின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கை நடத்தினர்.

Categories

Tech |