Categories
மாநில செய்திகள்

அரியர் மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி… கட்டாயம் தேர்வு எழுதனும்…? அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழகங்களை அரசாணை மூலம் எப்படி கட்டாயப்படுத்த முடியும். மாணவர்களுக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என பல்கலைக்கழகங்கள் அறிவிக்கக் கூடாது. அரியர் தேர்வுகளை நடத்த விருப்பம் கொள்ளும் பல்கலைக்கழகங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரியர் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |