Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதிலும் வெடிக்கும் போராட்டம்… டாக்ஸி டிரைவர்கள்… அதிரடி அறிவிப்பு…!!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதிலும் டாக்ஸி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இருந்தாலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதிலும் டிசம்பர் 3ஆம் தேதி டாக்ஸி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய டாக்ஸி சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பல சங்கங்கள், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |