விமான பயணி ஒருவர் சக பயணியிடம் மோசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளமான டிக்டாக்கில் விமானம் ஒன்றில் பெண் பயணியின் முடியில், சக பயணி ஒருவர் சூயிங்கத்தை வைத்து ஓட்டி வைக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பயணிகள் விமானத்தில் முன்னிருக்கையில் இருந்த பெண் தன்னுடைய மூடியால் பின் இருக்கையில் இருந்த பயணியின் டிவியை மறைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண் டிவியை மறைத்த பெண்ணின் முடியை முழுவதுமாக சூயிங்கத்தை வைத்து ஒட்டியும், காபியில் முடியை நனைத்தும் பல்வேறு மோசமான செயல்களைச் செய்துள்ளார்.
இந்த காட்சியை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலர் இது ஒரு மோசமான செயல், கீழ்த்தரமான செயல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இது அவரது தோழியாக கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.