விருச்சிகம் ராசி அன்பர்களே…! ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.
பணத்தை செலவு செய்யும் பொழுது கவனம் வேண்டும். புதிய நபரிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை வேண்டும். தொழில் வியாபாரத்தை சரியான முறையில் பார்க்க வேண்டும். ஊழியர்களிடம் கவனம் வேண்டும். எந்த ஒரு வேலை செய்யும் பொழுதும் கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அலைச்சல் ஏற்படும். தகுதிக்கேற்ற வேலை வந்துசேரும். தெய்வ வழிபாட்டால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனை வந்து சேரும்.
ஜாமீன் கையெழுத்து போட கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். மாணவக் கண்மணிகள் சிரமம் கொண்டு பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மட்டும் சிவப்பு நிறம்.