மகரம் ராசி அன்பர்களே…! அறிமுகமில்லாத எவருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம்.
தொழில் வியாபாரத்தில் டென்ஷன் அதிகமாக இருக்கும். சுமாரான அழகுதான் பணவரவு இருக்கும். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனம் செலுத்தவும். பொருளாதாரத்தை சிறப்படைய செய்வீர். செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். வெளியூர் வெளிநாடு செல்ல வாய்ப்பு கூடும். கவுரவமிக்க மாண்புமிகு பதவி வந்துசேரும்.அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கும். நினைத்த காரியங்கள் ஓரளவு நடக்கும். ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனை இல்லை கலகலப்பு இருக்கும். சகோதர உதவி கிடைக்கும்.
மனைவிக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் பச்சை நிறம்.