Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவனை இழந்தவரோடு காதல்…. வேறு பெண்ணோடு கல்யாணம்…. இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னை காதலித்து ஏமாற்றிய வாலிபரை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசிப்பவர் ரியாஸ் அகமது. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சென்னையில் வேலை செய்து வந்த போது அங்கு நஜீரா பானு என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். கணவனை இழந்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலித்து வந்துள்ளனர். இதனால் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். இந்த சமயத்தில் ரியாஸ் அகமதுவிற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் வெளிநாடு சென்றுள்ளார்.

பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு பெற்றோர் வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த நஜீரா பானு கோபத்தில் ரியாஸ் அகமதுவை போனில் தொடர்பு கொண்டு நான் உன்னை தீர்த்து கட்டுகிறேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன ரியாஸ் அகமது கொஞ்ச நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமலிருந்துள்ளார்.

பின்னர் சில வாரங்கள் கழித்து டீ கடை ஒன்றிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரியாஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கொலை செய்த கும்பலையும், சென்னையில் இருக்கும் நஜீரா பானுவையும் தேடிவருகின்றனர்.

Categories

Tech |