தாளக்குடி அருகே மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாளக்குடி காலனியை சேர்ந்த உச்சிமாகாளி என்பவரின் மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். மகள்கள் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உச்சிமாகாளிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் மனைவி அருள்மணியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த உச்சிமாகாளி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாலையில் தாழக்குடி புத்தனாறு கால்வாய் அருகே உச்சிமாகாளி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்மணி விரைந்து சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உச்சிமாகாளி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.