Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூரரைப் போற்று’ படத்தை புகழ்ந்த சமந்தா… எனக்கு தேவையான ஊக்கம் கிடைத்தது… டுவிட்டரில் பதிவு…!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான சமந்தா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் போற்றப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த வருடத்தின் மிகச் சிறந்த படம் சூரரைப் போற்று. மேலும் இந்த படத்தை பார்த்த பின்னர் எனக்கு தேவையான ஊக்கம் கிடைத்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |