நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 1,410.50 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில், 19 கிலோ எல்.பி.ஜி கேஸ் சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ .1,354.50 லிருந்து ரூ .1,410.50 ஆக உயர்ந்துள்ளது. சிலிண்டருக்கு விலை ரூ .56 அதிகரித்துள்ளது. மேலும் 14.2 கிலோ LPG சிலிண்டரின் விலை ரூ.610 ஆக உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூபாய் 55 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லா சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 594ஆக தொடர்கிறது.