இந்தியாவிலேயே புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் தத்தா உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான விஸ்வநாத் தத்தா (94) உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். இந்திய வரலாற்று காங்கிரசின் முன்னாள் தலைவரும், குருக்ஷேத்திர பல்கலைக்கழகத்தின் கவுரவ பேராசிரியருமான தத்தா பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலை வரலாறு, சுதந்திரப் போராட்ட வீரர் மதன்லால் திங்ராவின் வாழ்க்கை வரலாறு போன்ற பல்லாயிரக்கணக்கான நூல்களை எழுதியவர்.
இவர் லக்னோ மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றவர். அவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அவரின் மறைவுக்கு கல்வியாளர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.