அமெரிக்காவில் கடலில் மாட்டிக்கொண்ட நபர் ஒருவர் மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஸ்டூவர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவரின் படகு பழுதானதால் கடலில் மாட்டிக்கொண்டார். அவர் இரண்டு நாட்களாக கரை திரும்பாததால், அவர் இறந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரின் குடும்பத்தினர் கடலோர காவல் படையிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் உடனடியாக மீட்புக் குழுவினர் அவரை தேடி கடலுக்கு சென்றனர். அப்போது அவர் அங்கு உயிருடன் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். மேலும் அவர் இரண்டு நாட்களாக மீன்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். அதன்பிறகு மீட்பு படையினர் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.