புயல் முன்னெச்சரிக்கைக்கு முன்பு ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. அது இன்று மாலை அல்லது இரவு இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. அதன் பிறகு நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. அதனால் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் புயல் அறிவிப்புக்கு முன்னர் ஆழ்கடலுக்கு 170 படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. இதனையடுத்து 170 படகுகளில் 24 படகுகளில் இருந்த 250 மட்டும் இன்று காலை கரை திரும்பியுள்ளனர். மேலும் 146 படகுகளில் ஆழ்கடலில் தங்கியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. அதனால மீனவர்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.