தமிழகத்திலிருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது என்று எம்பி கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து மு.க.அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது பற்றி தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வதாக நேற்று கூறியிருந்தார்.
அது பற்றி கருத்து தெரிவித்துள்ள எம்பி கனிமொழி அளித்த பேட்டியில், “முக.அழகிரி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால், அதில் நான் கருத்து கூற ஒன்றுமில்லை. பாமகவினர் நேற்று நடத்திய நிகழ்வு தேர்தல் அரசியல் நாடகத்திற்காக என்று ஒருவர் கூறிய கருத்து என் ஞாபகத்திற்கு வருகிறது. தமிழகம் திராவிட மண். தமிழகத்திலிருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.