Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட் : 2 நாள் ரொம்ப கவனமா இருங்க…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை மன்னார் வளைகுடா பகுதியை கடந்த பிறகு டிசம்பர் 4ஆம் தேதி தென்தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கிறது.

இந்நிலையில் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும். வடதமிழகத்தில் குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Categories

Tech |