Categories
சினிமா தமிழ் சினிமா

கடுப்பேற்றிய அனிதா… புலம்பும் ரியோ … வெளியான முதல் புரோமோ…!!

பிக்பாஸ் -4  நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து போன வாரம் நடந்துமுடிந்த கால்சென்டர் டாஸ்க் மீண்டும் இந்த வாரம் தொடர்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அர்ச்சனா ,சோம், ஆரி ஆகியோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் ஆஜித் ,கேபி, பாலா ஆகியோர் வாடிக்கையாளர்களாகவும் பேசிக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று கால் சென்டர் ஊழியராக ரியோவும் வாடிக்கையாளராக அனிதாவும் பேசிக்கொள்வது போல புரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரியோவிடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார் அனிதா. அவர் கேள்விகளுக்கு பொறுமையாக ரியோ பதிலளித்து விட்டு பின் வெளியே வந்து டாஸ்க் என்பதால் நான் கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன் என புலம்புகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்றைய எபிசோடில் கண்டிப்பாக பஞ்சாயத்து இருக்குமென கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |