Categories
தேசிய செய்திகள்

நோட்டிஸ் ஒட்டுவதால்… புறக்கணிக்கும் அவலநிலை… சுப்ரீம் கோர்ட் கருத்து..!!

கொரோனா நோயாளிகளின் வீட்டு கதவில் நோட்டீஸ் ஓட்டுவதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். கொரோனா பாதிப்படையும் நபர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டுவது என்பது அரசியல் சாசன அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த செய்கையால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகின்றது. அவர்கள் வெளியில்  கண்ணியத்துடன் வாழும் நெறிமுறைக்கு எதிராக அமைகிறது.

ஒருவரின் அடிப்படை உரிமையை பாதிக்கும் இதுபோன்ற சுவரொட்டிகள் ஓட்டுவதை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி ‘பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டில் சுவரொட்டிகளை ஒட்ட மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டுவதால் பாதிப்பு ஏற்பட்டால், அது தவிர்க்கப்பட வேண்டும்.

கொரோனா பாதிப்புள்ள வீடுகளில் நுழைவதை தடுக்கவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன’. என்று அவர் விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் ‘வீட்டு கதவுகளில் நோட்டீஸ் ஓட்டுவதால் நோயாளிகளுக்கு சமூகத்தில் புறக்கணிப்பு ஏற்படுகின்றது’ என்று கூறினார். மேலும் மத்திய அரசு பதில் மனு மீதான விளக்க மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமை தள்ளிவைத்தது.

Categories

Tech |