Categories
தேசிய செய்திகள்

பத்தாம் வகுப்புனா போலீஸ் அதிகாரி… அஞ்சாம் வகுப்புனா அரசு அதிகாரி… ‘ஆப்’ மூலம் நடக்கும் மோசடி..!!

ஒரு ஆப் மூலம் அரசு தேர்வுக்கு ஆள்மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் நொய்டாவில் பகுதியை சேர்ந்த ஆர்பிட், தினேஷ் மற்றும் அமன் என்ற மூவரும் ஒரு மோசடி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இம்மூவரும்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9 பேர் கொண்ட குழு மூலம் பலருக்கு மோசடியாக அரசு வேலை வாங்கிக் கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையில் குறைந்தபட்சம் 100 பேருக்கு வேலை வாங்கித் தந்ததாக கூறப்படுகிறது.

டெல்லி மற்றும் ஹரியானா  காவல்துறையில் போலீஸ் வேலையை பெற பலருக்கு உதவி செய்துள்ளனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பெயரில் 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் டெல்லியில்  முண்ட்கா பகுதியில் அரசு வேலைகள், உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்திய தேர்வு மையத்தின் அதிகாரி உட்பட மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி குறித்து  குற்றவாளிகள் கூறியதாவது: “ஒரு பேஸ் ஆப்பை  பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். எக்ஸாம் எழுதுபவரின் புகைப்படத்தை கூட அவர்களின் ஆப் மூலம் மாற்றி உள்ளனர்” என்று போலீசார் தெரிவித்தார். சனிக்கிழமை கண்டறியப்பட்ட இந்த மோசடி வழக்கு கடந்த 3 நாட்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. அதில் தேர்வின் அளவை பொருத்து ரூ.10 லட்சம் முதல் ரூ .35 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர். இந்த மோசடியில் ஒரு வருமானவரி ஆய்வாளர், முன்னால் ஐடி ஆய்வாளர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.

Categories

Tech |