பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியான இன்றைய மூன்றாவது புரோமோவில் பாலாஜி கண்கலங்கி மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -4வது சீசனில் மிகக் கடுமையான போட்டியாளராக இருப்பவர் பாலாஜி முருகதாஸ். இவர் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மற்ற போட்டியாளர்களிடம் நேருக்கு நேர் தில்லாக பேசிவிடுவார் . பிக்பாஸ் ரசிகர்களிடையே இவரைப்பற்றிய பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரோமவில் பாலாஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் பிறந்தநாள் கேக் மற்றும் அவரது குடும்பத்தில் இருந்து லெட்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த லெட்டரை படித்த பாலாஜி கண்கலங்கி ‘நான் கொஞ்சம் கோபமா தான் இருப்பேன் ஆனால் உடனே எல்லாத்தையும் மறந்து விடுவேன். நான் யாரயாவது ஹர்ட் பண்ணிருந்தா சாரி ஆனால் திருப்பியும் ஹர்ட் பண்ணுவேன் என்னா கேம் அப்டி ‘என கூறுகிறார்.
#Day59 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MlCKh9nCNR
— Vijay Television (@vijaytelevision) December 2, 2020