Categories
மாநில செய்திகள் வானிலை

புரேவி புயல்… தமிழகத்தை எப்ப தாக்கும்… வெளியான தகவல்..!!

புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு வரக்கூடும்.

இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |