சாலையில் கொட்டிக்கிடக்கும் பணத்தை ஆர்வத்துடன் மக்கள் சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
பிரேசிலில் சாலை முழுவதும் பணம் கொட்டி கிடந்ததால் ஆர்வத்துடன் மக்கள் அதை சேகரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் வெளியான அந்த சம்பவத்தில் ஒரு பகீர் பின்னணி ஒன்று உள்ளது. என்னவென்றால், பிரேசிலில் Cricuma நகரில் திடீரென்று ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் வங்கிகளில் நுழைந்துள்ளனர். அவர் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் 10 கார்களில் வந்து இறங்கியுள்ளனர்.
பின்னர் அங்கு ஆறு பேரை பிணைக்கைதிகளாக பிடித்து கொண்டு, தெருவில் துப்பாக்கி சூடு நடத்தி ஏராளமான பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் காவலர் உட்பட இருவர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அவர்களுடைய நிலைமை என்னவென்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்த கொள்ளையர்கள், தப்பி செல்வதற்கு வசதியாக ஒரு திட்டம் போட்டுள்ளனர். எனவே கொஞ்சம் பணத்தை சாலையில் வீசியுள்ளனர்.
அப்படி வீசிய நேரத்தில் மக்கள் அந்த பணத்தை சேகரிக்கும் ஆர்வத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் தப்பித்து சென்றுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பிரபலம் ஒருவர், இந்த துயரமான சம்பவம் தான் என்றாலும் இது கஷ்டப்படும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக கிடைத்திருக்கும் பணம் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.