பைஃசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல் நாடு
உலகில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு இங்கிலாந்து. கொரோனா தொற்று கடந்த ஓராண்டாக உலக நாடுகளை பெரிதளவில் பாதித்து வருகின்றது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பேரழிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான மனிதர்களின் உயிர்களை காவு வாங்கியிருக்கிறது இந்த தொற்று. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த மருந்துகளை பயன்படுத்தி பல்வேறு கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரிட்டன் அரசு ஒப்புதல்
இந்நிலையில் பைஃசர்- பயோன்டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்து அடுத்த வாரம் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே தடுப்பூசியை பொதுமக்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கும் நாடு பிரிட்டன் ஆகும். பரிசோதனை செய்யப்பட்ட மருந்து இரண்டு இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படும். 4 கோடி மருந்துகளை பிரிட்டன் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.
பைஃசர்- பயோன்டெக் பெருமை
உலகிலேயே மிகவும் குறைவான காலத்தில், பத்து மாதத்தில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்ற பெருமை இந்த பைஃசர்- பயோன்டெக் மருந்து பெறுகிறது. இந்த மருந்து இந்தியாவில் பயன்படுத்துவது சாத்தியமா என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பைஃசர்- பயோன்டெக் மருந்து -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் இது சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது.