Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சரியாக படிக்கல… கண்டித்த பெற்றோர்… மாணவியின் முடிவு… கிருஷ்ணகிரி அருகே சோகம்..!!

கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |