தனுசு ராசி அன்பர்களே…! தோல்வியை கண்டு நீங்கள் துவண்டு விடாதீர்கள்.
கடுமையான முயற்சி நீங்கள் மேற்கொள்ள வேண்டும். நிதானமாக செயல்பட்டால் வெற்றி நீங்கள் ஈட்டிக் கொள்ளலாம். தாயின் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக கவனம் வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த பாருங்கள். சிறிய தடை தாமதம் இருக்க தான் செய்யும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. உணர்ச்சிகரமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். சில விஷயங்களில் வழியாக தான் இருக்கும். பணச் செலவை கட்டுப்படுத்த வேண்டும். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்ற நபரை இன்று நீங்கள் பார்ப்பீர்கள். புதிய நண்பர்கள் மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.