Categories
உலக செய்திகள்

எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள்…. “சீனாவின் திட்டமிட்ட சதி” வெளியான திடுக்கிடும் தகவல்….!!

அமெரிக்க ஆணையம் இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய சீன எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு இந்திய பகுதியை சேர்ந்தது. ஆனால் இதை முழுவதுமாக சீனா தங்களுக்கு தான் என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஜூன் 15ம் தேதி அன்று இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே இப்பகுதியில் மோதல் ஏற்பட்டபோது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் சீன வீரர்களும் பலியாகியுள்ளனர். ஆனால் அது பற்றிய தகவலை அந்நாடு வெளியிடவில்லை. ஆனால் இந்த தாக்குதல் சீனா அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று அமெரிக்க சீன பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கான ஆணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த ஆணையமானது 2000ம் வருடத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது. சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவு, தேசிய பாதுகாப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து இவ்வாணையம் அறிக்கையை தாக்கல் செய்யும். இந்நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில் 8 மாதங்களாக நீடித்த இந்திய-சீன மோதலானது கடந்த பல வருடங்களில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு மோசமான நிகழ்வு. இது சீனாவின் திட்டமிட்ட சில நிகழ்வுகளை  காட்டுகின்றது.

உதாரணமாக இந்த மோதலுக்கு பல வாரங்களுக்கு முன்னரே சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதித்தன்மையை மேம்படுத்துவதற்காக சண்டையை பயன்படுத்தும்படி அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான போட்டியில் இந்தியா ஈடுபட்டால் சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவு மோசமான அடியை சந்திக்கும் என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் லடாக் பகுதியில் நடந்த சீன- இந்திய தாக்குதலை சீனா தன்னுடைய வெற்றியாக கருதுகிறது.

இந்த தாக்குதல் இந்தியா தன்னுடைய பகுதியில் ஏற்படும் கட்டமைப்புகளை தடுக்கவோ அல்லது அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பதை எச்சரிக்கும் வகையிலோ சீனா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அதில் சீனாவின் முயற்சி பலனளிக்கவில்லை. மேலும் சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் 2012ல் ஆட்சியை பிடித்ததில் இருந்து இரு நாடுகளும் தங்கள் எல்லை பகுதியில் ஐந்து பெரிய மோதல்களை கண்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |