கொரோனா தடுப்பு மருந்து இந்தியா வந்தடைய 2021ம் ஆண்டு ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து விட்டனர். எனினும் கொரோனா பயன்படுத்தி சில மருத்துவமனைகள் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கு 3 முதல் 5 லட்சம் வரை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் மருத்துவம் பார்த்து முடிப்பதற்குள் 10 லட்சம் வரை மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து பணத்தை கறந்து விடுகின்றனர். கொரோனா என்பதற்கு தற்போது மருந்து இல்லை என்ற கால கட்டத்திலும், எந்த மருந்தை கொடுத்து அவர்கள் இப்படி பணத்தை வசூல் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
வணிக நோக்கம்:
பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கத்தோடு நோயாளிகளை அணுகுகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு இலவசமாக சிகிச்சை பார்த்து வருகின்றன. சில நாடுகளில் குறைந்த அளவு கட்டணத்தை, அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வாங்கி மருத்துவம் பார்த்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்து வருகின்றன. இது மருத்துவத் துறையை களங்கப் படுத்தும் விதத்தில் அமைகின்றது.
சத்தான உணவு:
பெரும்பாலான மருத்துவமனைகள் சத்தான உணவுகளை நோயாளிகளுக்கு வழங்கி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி பணத்தை வசூல் செய்கின்றன. எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மருந்துகள். மாத்திரைகளே கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் காய்ச்சல், சளி போன்றவற்றிற்கும் மருந்துகள் வழங்கப்படுகிறது. சுகாதார பணியாளர்களுக்கு சில எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கொடுத்து அவர்களை வேலை வாங்கிக்கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கி விடுகின்றன. ஆனாலும் இதனை அரசு அதிகாரிகள், போலீஸ் என யாரும் கேட்பதில்லை.
சுகாதாரப் பணியாளர்கள்
இப்படி லட்சக்கணக்கில் வசூல் செய்யும் மருத்துவமனைகளில் பெரும்பாலான வேலைகளை சுகாதாரப் பணியாளர்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக பணியாளர்களுக்கு சிறப்பு சம்பளம் கூட தருவதில்லை. அதற்கு பதிலாக வாரம் அல்லது மாதம் ஒருமுறை எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய மாத்திரையை வழங்குகின்றது.
அனைவருக்கும் சமம்:
மருத்துவ சேவை மூலம் அனைவருக்கும் சமமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் நம் நாட்டில் மருத்துவத்துறை இன்னும் கட்டமைக்க படவில்லை. இது போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளும் சரிவை சந்தித்து வரும் நிலையில், மருத்துவத்துறை மட்டும் வசூல் வேட்டையை செய்து வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.