ஜனவரியில் கட்சி தொடக்கம் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்தார்.
வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்…. நிகழும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ஏற்கனவே அவருடைய கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடந்த 31ஆம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தன்னுடைய முடிவிற்கு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பாடுகள் என்று தெரிவித்தார்கள்.
மிக மிக விரைவில் தன்னுடைய முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று அரசியல் வருகையை உறுதி செய்திருக்கின்றார். இதையடுத்து தற்போது, ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ரஜினி ட்விட் செய்துள்ளார்.