புரேவி புயலானது திருகோணமலையை கடந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புரேவி பபுயலின் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தற்போது இந்த புயலானது திரிகோணமலை அருகே கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், இலங்கையின் வடக்கே புரேவி புயலானது கரையைக் கடந்துள்ளது.
இப்படி கரையை கடந்து வரும் நிலையில் 80 – 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்துள்ள புரேவி புயலானது இன்று பாம்பன் அருகே வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.