இலங்கை திரிகோணமலை அருகே பலத்த சூறைக்காற்று மற்றும் கன மழையுடன் நள்ளிரவில் புரெவி புயல் கரையை கடந்தது. இதையடுத்து இன்று மாலை அல்லது நாளை அதிகாலை புயல் பாம்பன் – கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரெவி புயல் கரையைக் கடக்க இருக்கும் நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத அளவுக்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, புயல் மீட்புப்பணிகளுக்கு தமிழகத்தை தயார் படுத்தியது குறிப்பிடத்தக்கது.