54 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் யான் யான் என்று அழைக்கப்படும் 4 வயது சிறுமி ஒருவர் வீட்டிலிருந்து திடீரென்று காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், சிறுமி காணாமல் போவதற்கு முன்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் லியு (54) என்பவர் அந்த சிறுமியின் வீட்டிற்கு குடிக்க தண்ணீர் கேட்டு வந்துள்ளார். அதன் பின் மறுநாள் சிறுமியின் கால் சட்டையில் ரத்தக் காயங்கள் போன்றவை இருப்பது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சிறுமிக்கு ஏதோ நடந்துள்ளது என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், குழந்தையின் உடல் இன்னும் மோசமான நிலையில் தான் இருக்கிறது.
அவரது உடல் உறுப்புகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன நிலையில் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வருவதாகவும் வேதனையுடன் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அந்த 54 வயது நபரிடம் விசாரித்தபோது அந்த நபர் சிறுமியை வீட்டில் இருந்து கடத்தி சென்று வீட்டின் அருகில் உள்ள பள்ளமான இடத்தில் வைத்து வன்கொடுமை செய்துள்ளார்.
அந்த நபர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இது வழக்கு விசாரணையில் குற்றவாளியான லியுவுக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து லியு மேல்முறையீடு செய்வாரா? இல்லையா? என்று தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.