எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ள புதிய ரூபே டெபிட் கார்டை அவ்வங்கி அறிமுகம் செய்துள்ளது.
உலகில் உள்ள அனைவரும் பண பரிவர்த்தனை செய்வதற்காக செல்போன் செயலிகள் பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் பரிவர்த்தனை மேற்கொள்ள டெபிட் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தங்கள் வாடிக்கையாளர்களின் நலனைக்கருவி எஸ்பிஐ வங்கி ஒரு புதிய அறிமுகத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எளிதாக பரிவர்த்தனை மேற்கொள்ள எஸ்பிபி வங்கி புதிய ரூபே டெபிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
அதனை பயன்படுத்தி JCB நெட்வொர்க்கின் கீழ், உலகத்திலுள்ள எந்த ஏடிஎம், ஸ்வைப் கார்டு பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் இந்தக் கார்டை பயன்படுத்தி JCB -கூட்டமைப்பிலுள்ள சர்வதேச ஈகாமர்ஸ் வணிகர்களிடமிருந்து ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். இந்த புதிய அறிமுகம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.