புரெவி புயல் தமிழகத்தில் இன்று அல்லது நாளை காலை கரையை கடக்க உள்ளது. பாம்பன் – குமாரி இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புரெவி புயல் பாம்பன் அருகே உள்ளதால் அந்த பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் பாம்பனுக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் கரையை கடந்த புரெவி புயல் பாம்பன் – குமரி இடையே நாளை அதிகாலையில் மீண்டும் கரையை கடக்கிறது.
Categories