உலகில் பலருக்கு பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி பாதுகாத்து வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
பழைய ரூபாய் நோட்டை கொடுத்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். இது குறித்து முழு தகவலையும் இந்த செய்திக்குறிப்பில் தெரிந்துகொள்ளலாம். அதாவது கடந்த ஆண்டு 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது வெளியிட்ட 10 ரூபாய் நோட்டு நீங்கள் வைத்திருந்ததால் அந்த லக்கி வின்னர் நீங்கள்தான். அந்த பத்து ரூபாய் நோட்டில் ஒரு பக்கமாக அசோக சின்னமும்,மற்றொரு பக்கம் படகு சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். இருபக்கத்திலும் பத்து ரூபாய் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
இந்த நோட்டு உங்களிடம் இருந்தால் வீட்டிலிருந்தபடியே 20,000 முதல் 25 ஆயிரம் வரை பெறலாம். IndiaMart, ShopClues, Marudhar Arts போன்ற தளங்களில் இந்த ரூபாய் நோட்டுகளை விற்றால் 25 ஆயிரம் பெறமுடியும். இதன் வலைதள பக்கங்களுக்கு சென்று பார்த்தால் முழு தகவலும் கிடைக்கும். 5 ரூபாய் நாணயம் மற்றும் 10 ரூபாய் நாணயத்திற்கும் பணம் வழங்கப்படுகிறதாம்.