வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் அன்றாடம் வீடுகளில் சமையல் செய்வதற்கு சிலிண்டரின் தேவை அதிகம். வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 30 வருடங்களுக்கு மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கபட்டு வந்தது.
இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி அன்று விலை மாற்றப்படாமல் கடந்த மூன்று மாதங்களாக ரூ.610 ஆக இருந்தது. இந்நிலையில் திடீரென ரூ.50 உயர்த்தப்பட்ட்டுள்ளதால் விலை ரூ.610 லிருந்து ரூ.660 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வணிக சிலிண்டர் விலை டிசம்பர் 1ஆம் தேதி ரூ.56 உயர்ந்து ரூ.1410.50 விற்பனை செய்யப்படுகிறது.