ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கட்சி தொடர்பான விவரங்களை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த திங்கள்கிழமை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது ராகவேந்திரா மண்டபத்தில் அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதற்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். என்னுடைய முடிவை விரைவில் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் நடிகர் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று கூறி இருந்தார்கள். இந்த நிலையில் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கட்சி தொடர்பான விவரங்கள் டிசம்பரில் அறிவிக்கப்படும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்