வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்…. நிகழும் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட் போட்டுள்ளார். மேலும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், டிசம்பர் 31 இல் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குடன் நடிகர் ரஜினி இதனை பதிவிட்டுள்ளார். இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள், ஆதரவாளர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 – 5 மாதங்களே உள்ள நிலையில் ரஜினியின் இந்த ட்விட் அரசியல் கட்சியினரை நடுங்க வைத்துள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விடலாம் ? என்று பல்வேறு யுக்திகளை வகுத்து வருகிறது. அதற்கான தேர்தல் பணிகளை கடந்த 1 வருடங்களாகவே செய்துவரும் நிலையில் தற்போது ரஜினியின் இந்த கருத்து திமுக நிர்வாகிகளை பதற வைத்துள்ளது.