பராக் ஒபாமாவின் இளைய மகளின் நீக்கப்பட்ட டிக் டாக் விடியோவானது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் சமூக வலைதளங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் பராக் ஒபாமாவின் இளைய மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர் ஆவார். 19 வயதான இவர் தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்று டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவானது டிக் டாக் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த வீடியோவை பலர் டிக் டாக்கில் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பராக் ஒபாமாவின் மகள் சாஷா ஒபாமா தனது கல்லூரி வாழ்க்கையை கொண்டாடி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1333214434446159880