தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். தனது டுவிட்டர் மூலமாக ரஜினி பதிவிட்டுள்ள கருத்தில், ஜனவரி மாதம் கட்சி தொடக்கம்… டிசம்பர் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லனா எப்பவும் இல்லை என்ற ஹேஸ்டேக் உடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்… அற்புதம்…. அதிசயம்… நிகழும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்த நிலையில் அதே நாளில் இந்த டிசம்பரில் ரஜினி அரசியல் கட்சியை குறித்து அறிவிப்பது குறிப்பிடத்தக்கது.