தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்று நடிகர் ரஜினி தற்போது சூளுரைத்துள்ளார்.
நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்குவது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது கொரோனாவால், என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம் – இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை என்று சூளுரைத்துள்ளார்.