Categories
மாநில செய்திகள்

Big Alert: மிக அருகில் வந்துருச்சு புரெவி புயல்… மக்களே தப்பிச்சிடுங்க…!!!

பாம்பனுக்கு குறுக்கே புயல் நகரும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே புயல் நகரும் போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |