உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அப்போ நீங்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதனுக்கு மிக முக்கியமானது ஆரோக்கியம். நோய் வரும்போது அதை குணப்படுத்த நினைப்பதைவிட ஆரோக்கியமாக இருக்கும்போதே நோய் வருவதை தடுப்பது தான் புத்திசாலித்தனம். ஆயுர்வேத முறைப்படி நோய்களை தடுப்பதற்கு என்னென்ன வழிகள் என்பதை இதில் பார்க்கலாம்.
முதலில் குடல் பெருங்குடல் கல்லீரல் ஆகியவற்றில் இருந்து நச்சுகளை அகற்றுவது. ஏனெனில் பொதுவாக மலச்சிக்கல் மற்றும் நச்சுக்கள் உடலில் சேர்வதால் தான் உடல் எடை கூடுகிறது. அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து போராடக்கூடிய உணவை உட்கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டும். இதற்கு வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொண்டால் அது நமக்கு பயனளிக்கும்.
சூடான நீரில் நெய் அல்லது எலுமிச்சை சாறு:
வெறும் வயிற்றில் உணவை உட்கொள்வதில் முதல் முறையை என்னவென்றால் 200 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு அவற்றை உண்டால் உடலில் உள்ள கழிவுகள் கீழ்நோக்கி செல்லும். எலுமிச்சை சாறுக்கு பதில் நெய்யை தண்ணீரில் கலந்து குடிப்பதால் செரிமான பாதை மேம்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்.
மூலிகை தேனீர்:
காலை தேநீர் உட்கொள்வது என்பது மக்களிடையே தொன்றுதொட்டு வரும் பழக்கம். அதில் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வருவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். 1 தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள் அல்லது கொத்தமல்லி, ஒரு ஏலக்காய் அல்லது ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து அதனை ஆற வைத்து அருந்தினால் உங்கள் வயிற்றில் வீக்கம் மற்றும் அஜீரண கோளாறு ஏற்படுவதை குறைகின்றது.
வளர்சிதை மாற்ற தேனீர்:
இந்த தேநீர் செய்வதற்கு ஏலக்காய், லவங்கப்பட்டை, அரைத்த, இஞ்சி, கிராம்பு, மிளகு, நட்சத்திர சோம்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் வேக வைத்து தேநீராக அருந்தலாம். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்த உதவுகிறது. இந்த தேனீர் உடல் வெப்பத்திலும் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
செலரி சாறு:
கொத்தமல்லி போலவே இருக்கும் செலரி ஒரு தாவரமாகும். இது உடலுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கின்றது. பழங்கள், காய்கறிகள், பால், தயிர் போன்ற உடலில் நச்சுக்களை அதிகமாகிவிடும். இவற்றை உணவில் குறைத்துக் கொள்வதே எடையை குறைக்க எண்ணுபவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். இதற்கு பதிலாக நீங்கள் செலரி சாறை எடுத்துக் கொண்டால் அது உடலில் ஏற்படும் அலர்ஜியை குறைத்து உடல் எடையை குறைக்க வழி செய்கிறது.
பழங்கள்:
சாப்பிட்ட பிறகு காலையில் ஒரு நல்ல உணவு என்றால் அது பழங்கள். பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள், நெல்லிக்காய், செர்ரி பழம், ஸ்ட்ராபெர்ரி, அண்ணாச்சி, வாழைப்பழம், மாதுளை பழம் போன்றவற்றை உட்கொண்டால் உடல் எடை இழப்பிற்கு மிகவும் உதவும். இனிப்பான பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. பழங்கள் சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து உணவு உட்கொள்ளவேண்டும்.
எடை இழப்பு சில அடிப்படை விதிமுறைகள்
எப்போது நீங்கள் பசியாக இருக்கிறீர்களோ அப்போது மற்றும் உணவு உட்கொள்ள வேண்டும். சாப்பிட வேண்டும் என்பதற்காக உண்ணக்கூடாது. இதற்கு சூரியனின் சர்க்காடியன் ரிதம் முறையை பயன்படுத்துங்கள். அதாவது சூரிய அஸ்தமனம் ஆன பிறகு 14 மணி நேரம் உண்ணாமல் இருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு பிறகு இரண்டு மணி நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். காலை பழங்கள் உண்ணுங்கள் வயிறு பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உணவை கொஞ்சம் கொஞ்சமாக உண்பதால் நமக்கு மிகுந்த பலன் கிடைக்கும். இப்படி உண்டால் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.