Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Alert: இன்னும் 3 மணி நேரத்தில்… 11 மாவட்டங்கள்… மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 11 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்னும் மூன்று மணி நேரத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், கடலூர், அரியலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்.அதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |