நடிகர் ரஜினிகாந்தின் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், வரக்கூடிய டிசம்பர் 31-ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்த அர்ஜுனன் மூர்த்தி என்பவர் பாஜகவில் இருந்து ரஜினி புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழக பாஜக சற்று நேரத்துக்கு முன்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைமையை மீறி இதுபோன்ற விரும்பத்தகாத, விஷயங்களில் அவர் செயல்பட்டுள்ளார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.